நெல்லை கொக்கிரக்குளம் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பில் வண்ண மீன்கள் காட்சியகம் மற்றும் வண்ண மீன்கள் விற்பனையகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கால்நடைத் துறை மற்றும் மீன்வளம், மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சட்டப் பேரவை தலைவர் அப்பாவு மற்றும் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து துறை ரீதியான பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
முடிவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் சந்தித்து பேசியது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘ஓ.பி.எஸ் காலாவதியானவர். அவரை பற்றி ஏன் பேசுகிறீர்கள்?’ என அமைச்சர் ராஜகண்ணப்பன் சொல்லிவிட்டு எழுந்து சென்றார்.