திண்டுக்கல்: போலி ஆவணம் மூலம் சிம்கார்டு விற்பனை செய்தவர் கைது - சிக்கியது எப்படி?

ரமேஷ் மீது மோசடி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பு
ரமேஷ்
ரமேஷ்

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் முறைகேடாக 39 சிம்கார்டுகளை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

பழனி நெய்க்காரப்பட்டி சண்முகம்பாறை பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் ரமேஷ் (29), இவர் சிம் கார்டு விற்பனை செய்யும் ஏஜெண்ட்டாக வேலை செய்து வருகிறார்.

போலியான டிரைவிங் லைசென்ஸ், புகைப்படம், முகவரி சான்று ஆகியவற்றை பயன்படுத்தி 39 சிம் கார்டுகளை ரமேஷ் விற்பனை செய்துள்ளார். இதனை ஆக்டிவேஷன் செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

வேடசந்தூரை சார்ந்த சக்திவேல் என்பவர் தனது ஓட்டுநர் உரிம அடையாள அட்டை காணாமல் போனதாகவும், தனது அடையாள அட்டையை பயன்படுத்தி தனது பெயரில் சிம்கார்டு வாங்கி பயன்படுத்தப்படுவதாகவும் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை விசாரி செய்த திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பழனியை சார்ந்த ரமேஷ் என்பவர் சிம்கார்டு மோசடி செய்து விற்பனை செய்தது கண்டு பிடித்துள்ளனர்.

ரமேஷ் மீது மோசடி வழக்கு பதிவு செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, திண்டுக்கல் மாவட்டத்தில் போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி சிம் கார்டு ஆக்டிவேஷன் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com