திருப்பத்தூர் மாவட்டம், நாச்சியார் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன். (வயது 62). இவர் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவருடைய நிலத்தை ஒரு ஆண்டிற்கு குத்தகைக்கு எடுத்து வாழைமரம் பயிரிட்டுள்ளார்.
இந்த நிலையில் வாழை மரங்கள் சற்று வளர்ந்துள்ள நிலையில் வாழை மரங்களுக்கு நடுவே கஞ்சா செடிகளை பயிரிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் நாச்சியார்குப்பம் பகுதியில் கஞ்சா செடி பயிரிட்டிருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் நாச்சியார்குப்பம் பகுதியில் ஆய்வு திடீர் மேற்கொண்டனர்.
அப்பொழுது, நாகராஜனின் வாழைத் தோட்டத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, வாழை தோட்டத்தின் நடுவில் இராமன் 7 கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரிய வந்தது.
அதன் பின்னர் கஞ்சா செடிகளை பிடிங்கி காவல் நிலையம் கொண்டு வந்த காவல் துறையினர், மேலும் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகளை எடை போட்டு பார்த்த பொழுது அதன் மொத்த எடை 2 அரை கிலோ என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, குரிசிலாப்பட்டு போலீசார் ராமனை கைது செய்து அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வாழை தோட்டத்தில் கஞ்சா பயிரிட்ட நபரை காவல் துறையினர் கைது செய்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.