மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் சரிபார்ப்பு: வீடு வீடாக ஆய்வு செய்த கலெக்டர்

காந்தி நகரில் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்
கலெக்டர் ஆய்வு
கலெக்டர் ஆய்வு

தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகையை பெற மக்கள் அனைவரும் விண்ணப்பித்துள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் இன்று காலை வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள, "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை" திட்டத்தில் தகுதியான மகளிர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களின் தெரிவித்துள்ள தகவல்களை சரிபார்க்கும் பணிகளை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல்வேறு முறை கேடுகள் வெளியாகி வருகிறது.சொந்த வீடுகளில் இருப்பவர்கள் பலர் வாடகை வீட்டில் இருப்பதாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளனர்.பல தங்களது வருமானத்தை குறைத்துக்காட்டியுள்ளனர்.மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இல்லாத பலரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் செய்தவர்கள் வீடுகளில் ஆய்வு செய்யும் பணி நடந்தது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் இன்று நேரடியாக களம் இறங்கினார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட காந்தி நகரில் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் செய்தவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு ஆச்சரியப்படுத்தினார்.

இந்த ஆய்வின் போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், வட்டாட்சியர் பிரபாகரன் ஆகியார் உடனிருந்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com