மதுரை அதிமுக எழுச்சி மாநாடு ஆயத்த ஏற்பாடுகள்: முழு விவரம்

அதிமுக எழுச்சி மாநாடு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியது, அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக மாநாடு பொறுப்பாளர்கள் தகவல்.
மதுரை மாநாடு நுழைவாயில்
மதுரை மாநாடு நுழைவாயில்

மதுரை விமான நிலையம் அருகே உள்ள வலையாங்குளம் பகுதியில் நடைபெற உள்ள அதிமுக எழுச்சி மாநாடு நாளை ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற உள்ளது.

கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்தே மாநாட்டுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. மாநாட்டிற்கான இடம் சுத்தம் செய்யப்பட்டு வந்த நிலையில், ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் தகரக் கொட்டைகள் அமைக்கப்பட்டு அதில் 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது.

ஆயத்த நிலையில் இருக்கும் மதுரை எழுச்சி மாநாடு
ஆயத்த நிலையில் இருக்கும் மதுரை எழுச்சி மாநாடு

1500 தனியார் பாதுகாவலர்கள் மாநாட்டிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மேடைகளில் அலங்காரம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. மூன்று உணவு கூடங்கள் மூலம் 140 கேபின்கள் கொண்டு சைவ உணவு வழங்கப்பட உள்ளது. பத்திற்கு மேற்பட்ட இடங்களில் ஆண்கள், பெண்கள் கழிவறை செல்வதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு 500-க்கும் மேற்பட்ட தற்காலிக கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

350 ஏக்கர் பரப்பளவில் 40 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கு வளையங்குளம் மற்றும் மாநாடு நடைபெறும் இடங்களை சுற்றி 10க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன காப்பகங்களும் அமைந்துள்ளது.

மாநாட்டின் கொட்டகை
மாநாட்டின் கொட்டகை

மாநாடு நடைபெறும் நுழைவாயிலில் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட பிரம்மாண்ட அரண்மனை நுழைவாயில் அமைக்கப்பட்டு அதிமுக தொண்டர்களை வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடிபழனிச்சாமி ஆகியோர் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டு மாநாடு நுழைவாயில் பிரம்மாண்டமாக தயார் நிலையில் உள்ளது.

நுழைவாயிலில் இடதுபுறம் 51 ஆண்டுகால அதிமுக பொன்விழாவை முன்னிட்டு புகைப்பட கண்காட்சிகளும்., நலத்திட்ட உதவிகள் வழங்கியதை காட்சிப்படுத்தப்பட உள்ளது.

புகைப்பட கண்காட்சிகளின் ஆயத்த பணிகள்
புகைப்பட கண்காட்சிகளின் ஆயத்த பணிகள்

ஏற்கனவே தகர கொட்டைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டம் அதிகளவு எதிர்பார்க்கப்படுவதால் மேடையின் இருபுறமும் 50 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.

நுழைவாயிலில் உள்ள புகைப்படங்கள்
நுழைவாயிலில் உள்ள புகைப்படங்கள்

தற்பொழுது நாற்காலிகள் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு மாநாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநாட்டுக்காக பிரச்சாரம் மேற்கொள்வதற்கு மதுரையில் உள்ள அனைத்து தொகுதிகளும் மாநாடு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அழைப்பு விடுக்கும் வகையிலும் பிரச்சார வாகனங்கள் உள்ளது.

சமையல் பொருட்கள்
சமையல் பொருட்கள்

மதுரையை சேர்ந்த சபரீஸ் உணவகம் மூலம் 10 லட்சம் பேருக்கு 2000 நபர்கள் கொண்டு 3 இடங்களில் உணவு தயார் செய்யப்பட்டு வருகின்றனர். புளிசாதம், சாம்பார் சாதம் என இரண்டு உணவுகள் மட்டுமே வருகின்றனர். 1000-க்கும் மேற்பட்ட எரிவாயு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது உணவு சமைப்பதற்கு காய்கறிகள், மளிகை சாமான்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.

குடிநீருக்கு தண்ணீர் டேங்குகள் அமைக்கப்பட்டுள்ளது
குடிநீருக்கு தண்ணீர் டேங்குகள் அமைக்கப்பட்டுள்ளது

பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதற்காக ஆங்காங்கே 500 லிட்டர் தண்ணீர் டேங்குகள் வைக்கப்பட்டுள்ளது மாநாடு நடைபெறும் இடம் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு இரவு நேரங்களில் ரம்யமாக காட்சியளிக்கிறது.

- வெங்கடேஷ்வரன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com