மதுரை: ‘தமிழ் பாடத்தில் 100க்கு 138 மதிப்பெண்’ - பிளஸ் 2 தேர்வு முடிவால் மாணவி குழப்பம்

மதுரை: ‘தமிழ் பாடத்தில் 100க்கு 138 மதிப்பெண்’ - பிளஸ் 2 தேர்வு முடிவால் மாணவி குழப்பம்

பிளஸ்- 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு தமிழில் நூற்றுக்கு 138 மதிப்பெண் என முடிவு வந்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பிளஸ்- 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு தமிழில் நூற்றுக்கு 138 மதிப்பெண் என முடிவு வந்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் நூற்றுக்குள் ஒரு மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். இந்த நிலை மதுரை மாவட்டத்தில் பிளஸ் -2 பொதுத் தேர்வில் 95.84 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வகையில் மதுரை மாவட்டம், சூரக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்னும் மாணவி 2021 ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக அவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றதால் 12 ஆம் வகுப்பு தொடர முடியாமல் இந்த ஆண்டு தனியார் மூலம் பொது தேர்வு எழுத அனுமதி பெற்று எழுதியிருந்தார்.

திருமங்கலம் பிரான்சிஸ் பள்ளியில் ஆர்த்தி பொதுத்தேர்வு எழுதியிருந்தார். நேற்று முடிவு வெளியான நிலையில் ஆர்த்தி தேர்வு முடிவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில், தமிழில் நூற்றுக்கு 138 மதிப்பெண்களும், இயற்பியலில் 71 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 92 மதிப்பெண்களும், கணிதத்தில் 56, வேதியலில் 71 மதிப்பெண்களும் பெற்றுள்ளதாக முடிவு வெளியாகி உள்ளது. தமிழில் நூறுக்கு 138 மதிப்பெண்கள் வந்ததால் குழப்பம் அடைந்தார் ஆர்த்தி. இது சம்பந்தமாக திருப்பரங்குன்றம் தேவஸ்தானம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சரியான விளக்கம் கிடைக்காததால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளார்.

’’பிளஸ்-2 பொதுத்தேர்வில் 600 க்கு 514 மதிப்பெண்கள் எடுத்தும் மூன்று பாடங்களில் தோல்வி என்று வந்துள்ளதால், அடுத்து என்ன செய்வதென்று தெரிவ்யவில்லை. தோல்வி என்றால் மறுதேர்வுக்கு தயாராக வேண்டும். தேர்ச்சி என்றால் கல்லூரி படிப்புக்குத் தொடர வேண்டும். ஆனால், தற்போது என்ன செய்வதென்று தெரியவில்லை’’ என ஆர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

-பாலா

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com