கும்பகோணம்: வாண வேடிக்கையை பார்க்க கோவில் மீது ஏறிய இளைஞர் - கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த சோகம்

வாணவேடிக்கை பார்க்க சென்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம்: வாண வேடிக்கையை பார்க்க கோவில் மீது ஏறிய இளைஞர் - கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த சோகம்

கும்பகோணம் அருகே வில்லியவரம்பலில் ஸ்ரீ மீனாட்சி மாரியம்மன் ஆலயம் திருவிழாவில் வாணவேடிக்கை பார்ப்பதற்காக கோவில் மீது ஏறி போது இளைஞர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருநாகேஸ்வரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் தமிழ்வளவன் (28). வங்கி பணிக்காக தேர்வு எழுதிவிட்டு வேலைக்காக காத்திருந்தார். திருமணமாகவில்லை.

வில்லியவரம்பல் மேலத்தெருவில் உள்ள ஸ்ரீ மீனாட்சி மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதுபோல இவ்வாண்டு சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று இரவு வில்லியவரம்பல் மீனாட்சி மாரியம்மன் ஆலயத்தில் நடந்த திருவிழாவிற்காக சென்றிருந்தார். இரவு 10:30 மணி அளவில் சுவாமி புறப்பாடு நடைபெற இருந்த நிலையில் வாணவேடிக்கை நடைபெற்றது. அப்போது தமிழ்வளவன் கோவில் மீது உள்ள கோவில் மீது இருந்த சிங்கம் சிலையை பிடித்து ஏறும்போது சிலை பெயர்ந்து விழுந்தது. இதில் தமிழ்வளவன் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலையில் படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டிய அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் தமிழ்வளவன் ஏற்கனவே உயிரிழந்த விட்டதாக தெரிவித்தனர்.

தகவலயறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாச்சியார்கோவில் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மீனாட்சி மாரியம்மன் வீதி உலா ரத்து செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com