கிருஷ்ணகிரி: கணவனைக் கொன்று காட்டுக்குள் எரித்த மனைவி - அதிர்ச்சி பின்னணி

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை அடித்துக் கொன்று காட்டுக்குள் எரித்த மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கணவன் எரிக்கப்பட்ட இடம்
கணவன் எரிக்கப்பட்ட இடம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கடந்த மார்ச் மாதம் எரிந்த நிலையில் ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது இறந்து கிடந்தவர் பென்னாகரத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரின் கணவர் பிரகாஷ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து லட்சுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பிரகாஷை கொன்றது அவரது மனைவி லட்சுமிதான் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் பிரகாஷ் தொடர்ந்து அவரது மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி தனது கணவன் பிரகாஷ் தூங்கும்போது கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். இதன் பின்னர் லட்சுமி மற்றும் அவரது கள்ளக்காதலன் சின்னராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து பிரகாஷின் உடலை சானமாவு என்ற வனப்பகுதிக்கு கொண்டு சென்று பெட்ரோலை ஊற்றி எரித்தது விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கணவனை எரித்துக் கொன்ற மனைவி லட்சுமி மற்றும் அவரது கள்ளக்காதலன் சின்னராஜ் ஆகிய இருவரையும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

- கோபிகா ஸ்ரீ

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com