கையை விட்டுப்போகும் ஊட்டி பங்களா: பாலிவுட் நடிகைக்கு கோத்தகிரி தாசில்தார் வெச்ச செக்

கையை விட்டுப்போகும் ஊட்டி பங்களா: பாலிவுட் நடிகைக்கு கோத்தகிரி தாசில்தார் வெச்ச செக்

பாலிவுட் துவங்கி, கோலிவுட் வரையில் இந்திய சினிமாவின் ஹீரோக்கள், ஹீரோயின்களுக்கு உலகின் பல நாடுகளுக்கு தயாரிப்பு நிறுவன செலவில் ஷூட்டிங் போக ஆசையிருக்கும். ஆனால், இவர்கள் அத்தனை பேரும் சொந்தமாக ஒரு பண்ணை வீடு வாங்க ஆசைப்படுவது எங்கேயென்றால் நம்ம நீலகிரி மாவட்டத்தில்தான்.

ஊட்டியில் சொந்த ஃப்ளாட் இல்லாத முன்னணி நடிகர், நடிகைகளே கிடையாது. அமிதாப் ஃபேமிலி, ஷாரூக், அஜித், மோகன்லால், நயன்தாரா என்று ஆரம்பித்து பழைய செம்மீன் ஷீலா வரையில் ஊட்டியில் ஃபிளாட் வைத்துள்ளார்கள். சத்யராஜ், குன்னூரின் வண்டிச்சோலை பகுதியில் பல வருடங்களுக்கு முன்பே சொந்த வீடு வைத்துள்ளார்.

ராதாரவிக்கு கோத்தகிரி அருகே ஒரு வீடு உள்ளது. சிவகார்த்திகேயன் சில மாதங்களுக்கு முன்புதான் கோத்தகிரி அருகே சில கோடிகளுக்கு ஒரு பங்களா வாங்கினார். இப்படி நீலகிரி மாவட்டத்தில் பங்களா வைத்திருக்கும் நம் நட்சத்திரங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அதேவேளையில் இந்த பங்களாக்கள் திடீரென ஏதாவது சர்ச்சையில் சிக்குவதும் வழக்கம். நயன், ஜெயராம் உள்ளிட்டோர் முறையாக வரி செலுத்தவில்லை என்று வீடுகள் ஜப்தி வரை போய் மீட்கப்பட்டது. ஆனால் பாலிவுட் நடிகை பூஜா பட்டின் நிலையோ ரொம்ப மோசம்! பாவம்! அவர் வாங்கிய நிலமே ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கி, அவரது கையை விட்டு போகும் நிலையில் உள்ளது.

அதாவது நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுகா, ஜெகதளா கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை குப்பன் என்பவருக்கு 1978ல் அரசு ஒதுக்கியது. பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த இவர், தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வேறு யாருக்கும் விற்க கூடாது எனும் கண்டிஷனும் போடப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் இந்த நிலமானது மூன்று பேரின் கைகளுக்கு மாறியது. கடந்த 1990ல் இந்த நிலத்தை மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகை பூஜா பட் வாங்கினார். இது வருவாய் துறையினருக்கு தெரியவர, ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை நிலத்தை வேறு நபருக்கு விற்றதால் நில ஒதுக்கீட்டை ரத்து செய்து கோத்தகிரி தாசில்தார் 2016ல் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், விற்பனை பத்திரத்தில் உள்ள பெயர்களையும் நீக்கி உத்தரவிட்டார். ஆனால் இதை எதித்து தமிழக உயர்நீதிமன்றத்தில் நடிகை பூஜா பட் வழக்கு தொடர்ந்தார். அதில் ‘நில விற்பனையை ரத்து செய்யும் முன்பாக விளக்கம் அளிக்க தனக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. பட்டா வழங்கியது கலெக்டர் என்பதால் அதை ரத்து செய்ய தாசில்தாருக்கு அதிகாரம் இல்லை. 18 வருடங்களாக அந்த சொத்தை அனுபவித்து வரும் நிலையில் தடை செய்தது தவறு’என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் ஆஜராகி “ஆதிதிராவிடருக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தாசில்தார் உத்தரவிட்டது சரியே” என்று வாதிட்டார். இதையடுத்து, கோத்தகிரி தாசில்தார் பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனால் நொந்து போன பூஜாபட் டீம் உச்சநீதிமன்றம் செல்ல முடிவெடுத்துள்ளது. ஆனால், எங்கே சென்றாலும், சென்சிடீவ் விஷயமான ‘பஞ்சமி நிலம்’ விஷயத்தில் நீதிமன்றங்களின் முடிவுகள் அரசின் உத்தரவுக்கு சாதகமாகவே இருக்க வாய்ப்புள்ளது! ஏனென்றால் அதுதான் நீதி'' என்கிறார்கள்.

-ஷக்தி

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com