கேரளா மாநிலத்தில் பள்ளி மாணவன் மீது காரை ஏற்றி கொலை செய்த சொந்தகாரர் தலைமறைவான நிலையில் தமிழக கேரள எல்லை பகுதியில் வைத்து கைது குற்றவாளியை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில் ஊர் பொதுமக்கள் திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளா மாநிலம்,திருவனந்தபுரம் அடுத்த காட்டா கடை பகுதியில் வசித்து வருபவர்கள் அருண்குமார்-சீபா தம்பதி.இவர்களது மகன் ஆதிசேகர் 10ஆம் வகுப்பு அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
கடந்த மாதம் 30ஆம் தேதி ஆதிசேகர் மற்றும் அவரது நண்பரும் சேர்ந்து தெருவில் விளையாடும்போது ஒரு கார் மோதி ஆதிசேகர் பலியானார்.இந்த சம்பவம் குறித்து காட்டா கடை போலீஸார் வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சிறுவனின் பெற்றோருக்கு விபத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்த நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ஆதிசேகரின் சொந்தகாரர் ஒருவர் தான் முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு மாணவன் மீது காரை ஏற்றி கொலை செய்துள்ளார்.
இது திட்டமிட்டகொலை என நிரூபனமானதை தொடர்ந்து கொலை குற்றவாளி தலைமறைவான நிலையில் நேற்று இரவு தமிழக -கேரளா எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் வைத்து கேரள தனி படை போலீசார் பிரியரஞ்சனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.முன்னதாக விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்துவிட்டதாக நாடகமாடிய நிலையில் காரில் மோதி கொலை செய்ததது தெரியவந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அறிந்து காவல் நிலையத்தை சிறுவனின் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.