நடிகர்கள் தலைவர்கள் போன்ற பலருக்கு சங்கம் ஆரம்பித்து ரசிகர்களாக மாறுபவர்கள் இடையே அரிக்கொம்பன் என்ற யானைக்கு ஆட்டோ ஓட்டுநர் சங்கம் அமைத்துள்ளனர்.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள சின்னக்கானல் மற்றும் சாந்தன்பாறை பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற காட்டுயானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளின் மீது தாக்குதல் நடத்தியதுடன் 20 பேரை மிதித்து கொன்றுள்ளது.
.இதனால் இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி யானை பிடித்து ஜிபிஎஸ் ரேடியோ காலர் பொருத்தி பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதியான மங்கலதேவி வனப்பகுதியில் விட்டனர்.
தற்பொழுது தேனி மாவட்டத்திலுள்ள மேகமலை வனப்பகுதிக்குள் சுற்றி வருகிறது அரிக்கொம்பன். இந்நிலையில் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அரிக்கொம்பனுக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.
சின்னக்கானல் அணக்கரை ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் அரிக்கொம்பனுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்து ப்ளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.
இந்தப் பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் சின்னக்கானலில் அரிக்கொம்பன் வாழ்விடத்திற்குள் மனிதர்கள் புகுந்ததால் யானை 'அப்புறப்படுத்த ' வழிவகுத்தது என்பது அவர்களின் கருத்து.
யானை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டத்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே ரசிகர்கள் சங்கம் அமைக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
பல இடங்களிலும் வாகனங்களின் பெயர் அரிக்கொம்பன் என பெயர் இடம் பெறத் தொடங்கியுள்ளது. சமூக வலைதளங்களில் அரிகொம்பனின் படங்களையும் பரப்பி வருகின்றனர்.
அரிகொம்பனுக்கு மயக்க ஊசி செலுத்தி லாரியில் ஏற்றிச் செல்வதைக் கண்டு இப்படியொரு முடிவை எடுத்ததாகவும், வனப் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட யானையின் வாழ்விடத்தை மாற்ற சிலர் எடுக்கும் நடவடிக்கைகள் அடுத்த தலைமுறையால் தலைகீழாக மாறும் என்று தெரிவிக்கின்றனர் அப்பகுதிவாசிகள்.