கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள திரூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்திக். தொழிலதிபர். இவர் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார்.
இவரை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என சித்திக் மகன் நவ்ஷத் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அட்டப்பாடி என்ற பகுதியில் கால்வாயில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்தபோது சித்திக் கொலை செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சித்திக்குக்கு சொந்தமான உணவகத்தில் பணியாற்ரி வரும் ஷிபிலி என்பவரை பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதாவது சித்திக் வங்கி கணக்கில் பல்வேறு முறைகேடுகளில் ஷிபிலி ஈடுபட்டுள்ளார். இதனை தெரிந்து கொண்ட சித்திக் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷிபிலி அவருடைய நண்பரான பர்கானாவுடன் சேர்ந்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.