அரசு ஊழியரின் வீட்டில் கேரள போலீசார் சோதனை செய்தபோது, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் சிக்கியது. இதனை கேரள போலீசார் பறிமுதல் செய்தனர்.
கேரளா மாநிலம் பாலக்காட்டிலுள்ள பாலக்காயம் கிராம நிர்வாக உதவியாளர் சுரேஷ்குமார். இவர் திருவனந்தபுரம் மலைங்கீழ் பகுதியை சேர்ந்தவர். இவர் கடந்த 17 ஆண்டுகளாக கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், மாஞ்சேரியை சேர்ந்த ஒருவர் இருப்பிட சான்றிதழுக்காக விண்ணப்பித்திருந்தார்.
சான்றிதழ் கொடுக்க அவர் ரூ.2,500 லஞ்சம் வாங்கும் போது, சுரேஷ்குமாரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர்.
பின்னர், சுரேஷ்குமாரின் மன்னார்காடு வீட்டில் லஞ்ச ஓழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், 35 லட்சம் ரூபாய் ரொக்கப் பரணம், பல்வேறு வங்கிகளில் ரூ.40 லட்சம் மதிப்பிலான பிக்சட் டெபாசிட் பத்திரங்கள், ரூ.25 லட்சம் மதிப்பிலான வங்கி சேமிப்பு ஆவணங்கள், 17 கிலோ எடையுள்ள தங்க நாணயங்கள் ஆகிவை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் திருச்சூர் லஞ்ச ஓழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.