கரூர்: ’கடத்தியது ரூ10 லட்சம் மரம், அபராதம் 10 ஆயிரம்தானா?’-ஆடியோ ஆதாரத்துடன் கொந்தளிக்கும் மக்கள்

மரம் வெட்டியதற்கும், என் கணவருக்கும் சம்பந்தமில்லை
குற்றம்சாட்டும் பொது மக்கள்
குற்றம்சாட்டும் பொது மக்கள்

10 லட்சம் ரூபாய் மரங்களை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் உதவியுடன் கடத்தி விட்டதாக ஆடியோ ஆதாரங்களைக் காட்டுகிறார்கள் சேந்தமங்கலம் கிராம பொதுமக்கள்.

கரூர் மாவட்டம், சேந்தமங்கலம், கீழ்பாகம் பகுதியில் ரங்கமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அரசு நிலத்திலும், சாலையோரத்திலும் உள்ள சுமார் 10 லட்சம் ரூபாய் மரங்களை வெட்டிக் கடத்தி விட்டார்கள். இதற்கு பஞ்சாயத்து தலைவர் துணை போகிறார் என்று ஆடியோ ஆதாரத்துடன் கொந்தளிக்கிறார்கள் சேந்தமங்கலம் பொதுமக்கள்.

இதுபற்றி பெருமாள் மற்றும் அவருடன் வந்த 10க்கும் மேற்பட்டோர் ’’எங்கள் ஊரில் அரசு புறம்போக்கு இடங்களில் மரங்களை வெட்டி லாரியில் கடத்தப்பட்டும் போட்டோவையும், மரம் ஏற்றுவரிடம் யார் உங்களை வெட்ட சொன்னது என்று கேட்டபோது, பஞ்சாயத்து தலைவர் தான் ( தலைவர் கணவர் ) வெட்ட சொன்னார் என்று சொல்லும் ஆடியோவையும் காண்பித்து, இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார் ஆகியோருக்கு புகார் கொடுத்துள்ளோம். எங்கள் ஊர் வானம் பார்த்த பூமி, வறச்சியான பூமி, கொஞ்ச நஞ்ச மரம் இருப்பதால்தான் அவ்வப்போது மழை பெய்கிறது. இந்த மரத்தையும் வெட்டிவிட்டால் மழையே இல்லாமல் போய்விடும். அரசாங்க இடத்தில் மரத்தை வெட்டி கடத்தும் தைரியம் இவர்களுக்கு யார் கொடுத்தது? சுமார் 10 லட்சம் ரூபாய் பெருமானமுள்ள மரத்தை வெட்டியிருக்கிறார்கள். வெட்டியவர்களிடமிருக்கும் மரத்தை கைப்பற்றி அவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும்’’என்றார்கள்.

இதுபற்றி சேந்தமங்கலம் பஞ்சாயத்து தலைவர் சுமதி நடராஜனிடம் பேசினோம், ‘’என் கணவர் சொல்லி வெட்டியதாக சொல்லும் ஆடியோ பொய். மரம் வெட்டியதற்கும், என் கணவருக்கும் சம்பந்தமில்லை. மரம் வெட்டிய இடம் தனியாருக்கு சொந்தமான பட்டா இடம். வெட்டும் போது வண்டிப்பாதையில் உள்ள மரத்தையும் சேர்ந்து வெட்டிவிட்டார்கள். அவர்கள் வெட்டிய மரத்தில் 20 சதவிகிதம் மட்டுமே அரசு இடம் இருக்க வாய்ப்பிருக்கிறது. இதுபற்றி யூனியன் கமிஷனர், தாசில்தார் ஆகியோருக்கு நானே புகார் தெரிவித்தேன். அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துவிட்டு சென்றார்கள்’’என்றார்.

பொதுமக்கள் சொல்வது 10 லட்சம், அபராதம் 10 ஆயிரமா? இதுதான் செந்தமங்கலம் பஞ்சாயத்து தீர்ப்பு.

-அரவிந்த்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com