கரூர்: பெண்களின் பின்புறங்களை குறிவைத்து தட்டும் ரோமியோக்கள் - அலறும் இளம் பெண்கள்
கரூர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பெண்களின் பின்புறங்களை தட்டி விட்டு ஓடிய ரோமியோக்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாரியம்மன் திருவிழா என்பது கரூரில் மிகவும் புகழ் பெற்ற திருவிழா ஆகும். திருவிழாவின் ஒரு அங்கமான பூத்தட்டு நிகழ்ச்சி நடந்தது.
இதில், கரூரை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து கிராம மக்கள் பூத்தட்டு கொண்டு வருவது வழக்கம். விடிய விடிய நடக்கும் இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ஆண்கள் - பெண்கள் கலந்து கொள்வார்கள்.
வருடா வருடம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு இருக்கும். இவ்வளவு கண்காணிப்பையையும் கடந்து 2 ரோமியோக்கள், பெண்கள் கூட்டத்தில் புகுந்து அவர்களின் பின்புறத்தை தட்டி விட்டு நழுவிக் கொண்டிருந்தனர். அவர்களை பெண்களே வலைத்து பிடித்து பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரித்தபோது, கரூர் சின்னான்டான் கோயில் தரணிதரன் மற்றும் கார்த்தி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.