கரூர் அருகே உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5வது நாளாக தொடர் உண்ணாவிரத விவசாயியை போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கரூர் மாவட்டம், பரமத்தி பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்க மின் வாரிய அதிகாரிகள் ஆயத்தமாகி வரும் நிலையில், இதை எதிர்த்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி ராஜா பரமத்தி அருகே உள்ள கூனம்பட்டியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
கடந்த ஐந்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில், ராஜாவின் உடல் நிலையில் மாற்றம் தெரிந்தது. உயிருக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்து விடுமோ என எண்ணிய போலீசார் ராஜாவிடம் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று சொன்னதை ராஜா கேட்கவில்லை.
இதையடுத்து ராஜாவை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு உடனடியாக உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சையை டாக்டர்கள் செய்தார்கள். இச்சம்பவம் பரமத்தி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-அரவிந்த்