கன்னியாகுமரி அருகே வடமாநில பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்த சம்பவத்தில் 2-வது கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன் புதூரில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கொல்கத்தாவை சேர்ந்த தெபுராய் என்ற இளைஞர் மற்றும் 7 வயது குழந்தையுடன் வசந்தி பாரியா என்ற பெண் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
ஏற்கனவே வேறு திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த வசந்தி பாரியாவை ,தெபுராய் தமிழகம் அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
தெபுராய் மதுவிற்கு அடிமையானதால் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், மீண்டும் குடித்துவிட்டு வந்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தெபுராய் வசந்தி பாரியாவின் கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்த தகவலின் பேரில் போலீஸார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தெபுராயை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செங்கல் சூளை வேலைக்கு 2வது கணவரை நம்பி வந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.