காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள மடப்பள்ளி இருந்து சுவாமிக்கு புளியோதரை, தயிர் சாதம், நைவேந்தியம் ஆகிய உணவுப் பொருட்களை செய்யப்பட்டு வருகிறது.
இங்கு கரப்பான், பூச்சி, பல்லி, பூனை, விஷ பூச்சிகள் அதிகமாக உள்ளதால் மடப்பள்ளியில் தரமற்ற முறையில் உணவு தயாரிப்பதாக கூறி, டில்லி பாபு என்பவர் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிக்கு புகார் அளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து, ஏகாம்பரநாதர் கோவில் உள்ளே இருக்கக்கூடிய மடப்பள்ளி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனைக்குப் பிறகு சுகாதாரமாக இல்லை என கோவில் செயல் அலுவலருக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
இது குறித்து கோவில் இ.ஓ முத்துலட்சுமி கூறுகையில், ”அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து சென்றுள்ளனர். அப்பகுதியினை சுத்தமாக வைத்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளனர்” என தெரிவித்தார்.