காஞ்சியில் பிரபல ரவுடியின் உறவினர் மர்மக் கொலை - சிக்கிய 4 பேர் - நடந்தது என்ன?

கிரிதரனை கொலை செய்தவர்கள் கயிற்றால் கட்டி கிணற்றில் வீசியுள்ளனர்
கிரிதரன்
கிரிதரன்

காஞ்சிபுரம் பிரபல ரவுடியான ஸ்ரீதர் தனபாலின் உறவுக்கார இளைஞர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் பிரபல ரவுடியாக வலம் வந்து பின்னர் கம்போடியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தவர் ஸ்ரீதர் தனபால்.

இவரது மூத்த அக்கா பாக்கியம் என்றவரின் உறவுக்கார மகன் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர் கிரிதரன்(29). இவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கடந்த ஜனவரி மாதம் 13 -ம் தேதி புதுப்பாளையம் பகுதியில் ஒரு பாழடைந்த வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றின் அருகே மதுஅருந்திக் கொண்டிருந்தனராம்.

அப்போது, யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டத்தில் நண்பர்கள் கிரிதரனை தாக்கி கொலையும் செய்து விட்டு கயிற்றால் கட்டி அருகிலுள்ள கிணற்றில் கல்லை கட்டி இறக்கிவிட்டு போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

மேலும், அடுத்தடுத்த சில நாட்களில் கிரிதரன் சடலம் மேலே வராத வண்ணம் அங்குள்ள மரங்களையும் வெட்டி கினற்றினுள் போட்டுள்ளனர்.

இந்த நிலையில், தனது தம்பி கிரிதரனை காணவில்லையென அவரது அக்கா கிரிஜா சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் செய்துள்ளார்.

இந்l நிலையில், கிரிதரனுடன் மது அருந்திய நண்பர்கள் சிலர் கஞ்சா மற்றும் குடிபோதையில் கிரிதரனை தாக்கி கயிற்றால் கட்டி கிணற்றில் வீசியிருப்பதாக சிலரிடம் தெரிவித்துள்ளனர்.

இதை அறிந்த சிவகாஞ்சி காவல் நிலையத்தினர் அக்கிணற்றில் தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த்துறையினரின் உதவியுடன் இன்று. தேடியபோது மண்டைஓடு எலும்புக்கள் மட்டுமே கிடைத்தன.

இது தொடர்பாக காவல்துறையினர் அதே பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த கிரிதரனின் நண்பர்களான தாமோதரன்(19), ஆகாஷ் (18), கார்த்தி (18), ஹரிஷ் (20) ஆகிய 4 பேரையும் கைது செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக காவல்துறையினர் மேலும் சிலரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போதையில் உடன் பழகிய நண்பரை சக நண்பர்களே கொலை செய்துள்ள சம்பவமும், காணமால் போனதாக எண்ணப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com