காஞ்சிபுரம் அருகே தேங்கிய மழைநீரில் நீச்சல் குளத்தில் குளிப்பதை போன்று போதை ஆசாமி உற்சாகத்துடன் குளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
இந்தத் திடீர் மழைக்காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இருப்பினும் வாட்டி வதைத்து வந்த அக்னி வெயில் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம், கச்சபேசுவரர் கோயில் அருகே மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் சாலையில் தேங்கிய மழைநீரில் படுத்துக்கொண்டு நீச்சல் குளத்தில் குளிப்பதைப்போன்று ஆனந்த குளியல் போடும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
இதில் மதுபோதையில் இருக்கும் இளைஞர் நீச்சல் குளத்தில் குளிப்பதை போன்று ஆனந்தமாக சாலையில் படுத்து உருண்டும், தேங்கிய நீரில் குளிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.இதை அங்கிருந்தவர்களில் யாரோ ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.