காஞ்சிபுரம்: சுற்றுலா சென்றவர்களின் வீடுகளில் அடுத்தடுத்து கைவரிசை - சி.சி.டி.வியில் சிக்கிய ‘கிளவுஸ் கொள்ளையன்’

நாடி ஜோதிடர் வீட்டில் 8 பவுன் தங்க நகை,50,000 மதிப்புள்ள லேப்டாப் திருடு போயிருப்பது தெரிவந்துள்ளது. தமிழரசு என்கிற ஆசிரியர் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சியானது நடைபெற்றுள்ளது.
போலிசார் சோதனையின் போது
போலிசார் சோதனையின் போது

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் அருகே சுதர்ஷன் நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் டேனியல் பால்-சாந்தி தம்பதியர்.டேனியல் பால் ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலுள்ள ஓரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

நாகர்கோவிலை சொந்த ஊராக கொண்ட இவர் தனது மனைவி இரண்டு மகன்கள் என குடும்பத்தினருடன் சுதர்சன் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.இவர் தனது மகன்களுக்கு கோடை விடுமுறை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு கடந்த சனிக்கிழமை மாலை வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பதினருடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில் இவரது வீட்டின் மேல் தளத்தில் குடியிருந்துவரும் கார்த்திகேயன் என்பவர் நேற்று இரவு வெளியில் செல்லும் போது டேனியல் பால் வீட்டின் பூட்டானது உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து இச்சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

இதனையெடுத்து இன்று காலை டேனியல் பால் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இதனையெடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முன்னிலையில் சோதனை செய்ததில் வெவ்வேறு இடங்களில் வைத்திருந்த தங்க நகைகளில் சுமார் 20சவரன் தங்க நகை திருடு போயிருப்பது சோதனையில் தெரியவந்தது. வெவ்வேறு இடத்தில் தங்க நகைகள் வைத்திருந்ததால் 30சவரன் நகை தப்பியது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை தடயங்கள் சேகரித்து வருகின்றனர்.

அதே போல சுதர்சன் நகர் விரிவாக்க பகுதி மற்றும் அருகாமை பகுதிகள் என மேலும் வைத்தியநாதன் என்கிற நாடி ஜோதிடர் வீட்டில் 8 பவுன் தங்க நகை,50,000 மதிப்புள்ள லேப்டாப் திருடு போயிருப்பது தெரிவந்துள்ளது. தமிழரசு என்கிற ஆசிரியர் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சியானது நடைபெற்றிருக்கிறது. இன்னும் மேலும் இரண்டு வீடுகளின் உரிமையாளர்கள் வராததால் கொள்ளை போனது குறித்து கணக்கிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி போலீசார் குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் நாடி ஜோதிடர் வைத்தியநாதன் வீட்டில் கடந்த சனிக்கிழமை அன்று நள்ளிரவு 1.30மணியளில் கையுறை அணிந்தபடி நோட்டமிட்டவாறு வரும் கொள்ளையன் ஒருவர் கொள்ளையடிக்க வந்த காட்சிகளும்,கொள்ளையடித்து கொண்டு திரும்பும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com