காஞ்சிபுரம்: "போதைப் பொருள் விற்பனை" - காட்டிக் கொடுத்த மாற்றுத்திறனாளிக்கு அரிவாள் வெட்டு

இயற்கை உபாதை கழிக்க வயல்வெளிக்கு சென்றதாகக் கூறப்படும் நிலையில் தீடிரென அங்கு வந்த மர்ம கும்பல் வரதனை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடினர்.
Kanchipuram
Kanchipuram

காஞ்சிபுரத்தை அடுத்த மாமண்டூர் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருபவர் மாற்றுத்திறனாளி வரதர்.டெய்லர் தொழில் செய்து வரும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இப்பகுதியில் குடிபெயர்ந்து வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.

இவர் கடந்த மாதங்களுக்கு முன்பாக திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளாறு அருகே வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அங்குள்ள ஓர் கடையில் போதைப் பொருட்களான பாக்கு, ஹான்ஸ் போன்ற பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் போலீசாருக்கு தெரிவித்த தகவல் வெளிவரவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரதன் வீட்டிற்குப் பயங்கர ஆயுதங்களுடன் வந்து தாக்க முற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து தெள்ளாறு காவல்நிலையத்தில் வரதன் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது

இதனால் அச்சமடைந்த வரதனின் மனைவி தனது கணவருடன் மாமண்டூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடகை வீட்டில் குடியேறினர். இந்த நிலையில் இன்று காலை வரதன் இயற்கை உபாதை கழிக்க வயல்வெளிக்கு சென்றதாகக் கூறப்படும் நிலையில் தீடிரென அங்கு வந்த மர்ம கும்பல் வரதனை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடினர். இரத்த வெள்ளத்தில் வரதனின் கதறல் சத்தத்தினை கண்ட அக்கிராம மக்கள் வரதனை மீட்டு அவசர ஊர்தி மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரையின் பெயரில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

போதைப் பொருட்கள் விற்பனையைக் காட்டிக் கொடுத்தவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com