திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது. இதனால், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக வருமான வரி துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் சோதனையிட முடிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, இன்று காலை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 3 கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்டுள்ள நிலத்தின் விவரங்கள் கோப்புகள் முறையாக உள்ளதா? எனவும், பணப் பரிவர்த்தனைகள் சரியான முறையில் நடைபெற்றுள்ளதா? எனவும்,
அனைத்து ஆவணங்களையும் தற்போது விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சார் பதிவாளர் அலுவலர்களிடம் கிடுப்பிடி விசாரணை நடத்தி வருகிறனர்.
வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை காரணமாக சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
சோதனையையொட்டி, 50 -க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்புடன் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையில் முக்கியப் பிரமுகர்கள் சிலரது ஆவணங்கள் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.