‘தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?’ - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு வரும் 7ம் தேதிக்கு பதிலாக 12ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வெயில் குறையவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியானது.

இந்த சூழலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனால் பள்ளி திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்படுமா? என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக 12ம் தேதி பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு 7ம் தேதிக்கு பதில் 12ம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அதேபோல, ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com