விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்-1 விண்கலம்!

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோவால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா எல்-1 விண்கலம்
விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்-1
விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்-1

இந்தியா சார்பில் முதன் முதலாக சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்டது தான் ஆதித்யா எல்-1 விண்கலம். இந்த விண்கலம் சூரியனின் உள்ள காந்தபுயலை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவால் சூரியனுக்கு அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறும்.

அதையடுத்து இந்த விண்கலத்தில் பெங்களூருவில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட 7 ஆய்வு கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் "லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்" என்கிற இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக சூரியனை நோக்கிய கோணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆதித்யா எல்-1
ஆதித்யா எல்-1

இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் சரியாக இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா எல்-1 விண்கலம். 1,485 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்-1 விண்கலம் 125 நாட்கள் பயணித்து எல்-1 பகுதியை அடையும்.

அதை தொடர்ந்து 7 முக்கிய கருவிகளில் 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com