ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியின் உலக தடகள மும்முறை தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் அப்துல்லா அபூபக்கர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா நகரில் மிகியோ மெமோரியல் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த தடகள போட்டியில் ஆடவர் பிரிவு ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் இந்திய வீரர் அப்துல்லா அபுபக்கர் கலந்துகொண்டு 16 புள்ளி 31 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறும்போது, ‘காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அப்துல்லா அபூபக்கர் தற்போது தங்கம் வென்று இருப்பது மற்ற தடகளப் போட்டி வீரர்களுக்கு உத்வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்கும். அவருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என கூறியுள்ளார்.