தன் மனைவியிடம் தகாத உறவில் இருந்த வடமாநில இளைஞரை தமிழகம் வரவழைத்து, கட்டி வைத்து அடித்து உதைத்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், செந்தவுலி மாவட்டத்தை சேர்ந்தவர் நவுசாத். 24 வயதான இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஒரு மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்திருக்கார். அப்போது அங்கு பணிபுரிந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சாகர் பாஸ்வான் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
பழக்கம் நீளவே, சாகர் மனைவி தீப்திகுமாரியிடம் தொடர்பு ஏறபட்டு இருக்கிறது.அந்த தொடர்பு எல்லை மீறவே பாஸ்வானுக்கும், நவுசாத்க்கும் பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது.இதில் பாஸ்வான் நவுசாத்தை அடிக்க போக,பயந்து போய் உத்தரப்பிரதேசத்துக்கே கிளம்பிவிட்டார் நவுசாத்.
அப்படியே பாஸ்வானுக்கு தெரியாமல் தீப்திகுமாரியுடன் பேசி வந்திருக்கார். தீப்திகுமாரி 'தமிழ்நாட்டுக்கு வாங்க. ரோகித் நெம்பர் தர்றேன். இவர்கிட்ட பேசினா வேலை வாங்கி தருவாருன்னு சொல்லி இருக்கிறார்.அதை நம்பி நவுசாத் ரோகித்தை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்’.’வா வேலை வாங்கி தருகிறேன்’ என்று உறுதி சொல்லி இருக்கிறார் ரோகித். ரோகித்தும், சாகர் பாஸ்வானும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பொம்மை துப்பாக்கி காட்டி மிரட்டி வழிப்பறி ஈடுபட்டதில் குற்றவாளி பாட்னர்கள்.
இது தெரியமால் உத்தரப்பிரதேசத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு புறப்படுகிறார் நவுசாத்.கோயம்புத்தூர் வந்து இறங்கிய நவுசாத் ரோகித்தை தொடர்பு கொண்டுள்ளார்.
ஈரோட்டுக்கு வா என்று சொல்லியது ஈரோட்டுக்கு வர, மறுபடியும் சேலம் வர சொல்லிய் ரோகித் நவுசாத் வந்ததும் சில இடங்களுக்கு வேலை வாங்கி தருவதாக பாவ்லா செஞ்சி சீன் போட்டு இருக்கார். பிறகு நவுசாத்தை கூட்டிக்கொண்டு குமாரபாளையம் பக்கமுள்ள கிணறுகுட்டி மலை என்ற இடத்திற்கு கூட்டி வந்திருக்கார்.
அங்குதான் பஸ்வான் இருந்திருக்கார். பாஸ்வான் இடமென்று தெரியாமல், அங்கு வந்து மாட்டிகொண்டார் நவுசாத். பிறகுதான் தெரிந்து இருக்கிறது. ரோகித், பாஸ்வான் போட்டி பிளான் என்று.
நவுசாத்தை கட்டி போட்டு அடித்த பாஸ்வான். ' என் பொண்டாட்டிய வச்சிருந்த இல்ல, உன் வீட்டுக்கு போன் பண்ணி காச போட்டு விட சொல்லு என்று மிரட்டி இருக்கிறார்.நவுசாத்தும் வீட்டுக்கு போன் செஞ்சி அக்கவுண்டில் பணம் போட சொல்ல, ரூ.20,000 ஆயிரம் பணம் போட்டு இருக்கிறார்கள்.காசு வந்தவுடனே அதிக ஆசை ஏற்பட்டு இருக்கிறது பாஸ்வானுக்கு. 2 லட்சம் கேட்டு நவுசாத் குடும்பத்தாரை மிரட்ட, அவர்கள் கோவை வந்து ஐ.ஜியிடம் புகார் கொடுத்தனர்.
தனிப்படை போலீஸாரிடம் பேசினோம்.' ஐ.ஜியிடம் கொடுத்த புகார் எஸ்.பி, டி.எஸ்.பி மூலம் குமார்பாளையம் வந்திச்சி. நாங்க போன் நெம்பர் லொகேஷன் வச்சி தேடினோம். அதுக்குள்ள அடி தாங்க முடியாம, நவுசாத் எப்படியோ தப்பிச்சி வந்துட்டாரு. ரோகித் தலைமறைவாயிட்டான். பாஸ்வான கைது செஞ்சி இருகோம்.' என்றார்கள்.