12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்- தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் உள்பட 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக ராஜாராமன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக குமார் ஜெயந்த், மாற்றுத்திறனாளி நலத்துறை செயலாளராக சிஜி தாமஸ் வைத்தியன் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதாரத்துறை சிறப்புச் செயலாளராக கலையரசி, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநராக ஆனந்த் குமார், தொழில்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக பூஜா குல்கர்னி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக வேங்கடபிரியா, ஊரக வளர்ச்சி மேம்பாட்டு முகமை திட்ட அலுவலராக மோனிகா ராணி, தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டு நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளராக விக்ரம் கபூர், சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநராக சரவணன் உள்பட 12 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com