சாட்டையை சுழற்றிய துரைமுருகன் - பதுங்கும் வேலூர் மாநகராட்சி ஊழியர்கள்!

காட்பாடி பள, பளக்குது! வேலூர் சாலைகள் இளிக்குது! நானே நேரில் வந்து சாலைகளை ஆய்வு செய்யப்போகிறேன் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.
அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் நடந்த 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் 4.81 கோடி ரூபாய்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்புரையாற்றினார்.

"1971ம் ஆண்டு நடந்த தேர்தலில் காட்பாடி தொகுதியில் நிறுத்தப் பட்டேன். அந்த தேர்தலில் நான்கு வாக்குறுதிகளை கொடுத்தேன். பொன்னை ஆற்றின் குறுக்கே பாலம், குடியாத்தத்திலிருந்து பிரித்து காட்பாடி தனி தாலுகா, திருவலம் பகுதியில் சர்க்கரை ஆலை, பாலாற்றில் இருந்து குடிநீர் சப்ளை இந்த நான்கு வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளேன்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்திலேயே இல்லாத அளவிற்கு காட்பாடி தாலுகா அலுவலகம், காட்பாடி சுற்று வட்டார பகுதிகளில் 40 உயர் நிலைப்பள்ளிகள், காவிரி கூட்டு குடிநீர் திட்டம், பாலாற்றில் ஆறு இடங்களில் தடுப்பணை என நிறைய சாதித்து உள்ளேன். கிட்டத்தட்ட 53 ஆண்டுகள் காட்பாடியில் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளேன். விரைவில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க தொழில் பூங்கா அமைக்க உள்ளேன்.

வேலூர் மாவட்ட ஆட்சியர், காட்பாடி தாசில்தார் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை சிறப்புடன் செய்து வருகின்றனர். ஆனால் வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கடந்த ஆட்சியில் போடப்பட்ட மாநகராட்சி சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதை நான் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளேன்" என்று பேசினார். இது அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

- அன்பு வேலாயுதம்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com