கரூர்: வயதான தம்பதி அடித்துக்கொலை - மாந்தோப்பில் என்ன நடந்தது?

மாந்தோப்பில் வயதான தம்பதி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை சம்பவம் நடந்த வீடு
கொலை சம்பவம் நடந்த வீடு

கரூர் மாவட்டத்தில் உள்ள ஓடையூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி. தைலி. தம்பதி இருவரும் பல ஆண்டுகளாக தனிமையில் வசித்து வருகின்றனர்.

மேலும், இந்த தம்பதி அதே ஊரைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பை கடந்த 15 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வயதான இவர்கள் இருவரும் கல்லால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து காவல் துறையினர் மாந்தோப்புக்கு விரைந்து வந்தனர். பின்னர், கணவன், மனைவி இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தைலி அணிந்திருந்த நகைகள் அனைத்தும் காணாமல்போய் இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே இந்த கொலையானது நகைக்காக, நடந்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மாந்தோப்பில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

- கோபிகா ஸ்ரீ

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com