தென்கொரியா: ‘அப்புறம் எனக்கு பசிக்கும்ல’ - காட்சிக்காக ஒட்டியிருந்த பழத்தை சாப்பிட்ட மாணவர்

பல்கலைக்கழகத்தின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு ஒட்டியிருந்த வாழைப்பழத்தை சாப்பிட்ட மாணவர் அதன் தோலை மீண்டும் அதில் ஒட்டிச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வாழைப்பழம் சாப்பிடும் மாணவர்
வாழைப்பழம் சாப்பிடும் மாணவர்

தென்கொரியா நாட்டில் சியோல் தேசிய பல்கலைக்கழகம் உள்ளது. இங்குள்ள அருங்காட்சியக சுவற்றில் பல்கலைக் கழக மாணவர்களுக்கு காட்சிப்படுத்தி விளக்கும் வகையில், வாழைப்பழம் ஒன்றை மௌரிசியோ கேடிலன் என்ற கலைஞர் டேப் மூலம் ஒட்டி வைத்திருந்தார்.

இதை பார்த்ததும் ‘நோ ஹூன் சூ’ என்ற கவின்கலை மாணவர் கலைப்படைப்பாக டேப் மூலம் ஒட்டப்பட்டிருந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டார்.

அதற்கு ‘காலை உணவை சாப்பிடாததால் பசியின் காரணமாக பழத்தை சாப்பிட்டேன்’ என்று அந்த மாணவர் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

மாணவர் ‘நோ ஹூன் சூ’ வாழைப்பழத்தை சுவற்றில் இருந்து எடுத்து சாப்பிட்டு பின்னர் அதன் தோலை பழம் இருந்த அதே சுவற்றில் டேப் மூலம் ஒட்டுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com