விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பல மணிநேரம் காத்திருந்த விழா ஏற்பாட்டாளர்களிடம் காலக்கெடு முடிவடைந்து விட்டதாக கூறியதால் வருவாய் கோட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்துக்களின் முக்கிய விழாவாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுதினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பல்வேறு பகுதிகளில் நிறுவக்கூடிய விநாயகர் சிலைகளுக்கு வருவாய்த்துறை,கிராம நிர்வாக அலுவலர்,தீயணைப்புத்துறை,மின்வாரிய அலுவலகம்,அந்தந்ந எல்லைகளுக்குட்பட்ட காவல்நிலையங்களில் அனுமதி பெற்றிட வேண்டும் எனும் விதிமுறையானது விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கு எவ்வித விதிமுறைகள் குறித்து அறிவிப்பும் விழா ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவிக்கவோ,செய்தி வாயிலாகவே தெரியபடுத்தவில்லை என கூறப்படுகிறது.இதனால் கடந்த ஆண்டுகளை போலவே காவல் நிலையங்களை விழா ஏற்பாட்டாளர்கள் நாடிவரும் நிலையில் அவர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று அனுமதி கோரி விண்ணப்பத்திட தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை, தீயணைப்பு துறை, மின்சாரத்துறை அடங்கிய குழுக்கள் விநாயகர் சிலை அனுமதிக்கான விண்ணப்பங்களை பெற பணியில் அமர்த்தப்பட்டிருந்தாலும் கூட, இது குறித்த தகவல் தெரியாததால் விழா ஏற்பாட்டாளர்கள் பலர் தாமதமாக விண்ணப்பிக்க வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதி கோரி விண்ணப்பிக்க காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்டசியர் அலுவலகத்திற்கு கடந்த இரண்டு நாட்களாக வரும் விழா ஏற்பாட்டாளர்களுக்கு காலக்கெடு முடிவடைந்துவிட்டதாக கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர்.இதனால் விழா ஏற்பாட்டாளர் செய்வதறியாது குழம்பி தவிக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க வந்திருந்த விழா ஏற்பாட்டாளர்கள் அலுவலகத்தை நாடிய நிலையில் காத்திருக்க கூறியதாக கூறப்படுகிறது.இதனால் பல மணிநேரம் விழா ஏற்பாட்டாளர்கள் காத்திருந்த நிலையில் தி டீரென அதிகாரிகள் காலக்கெடு முடிவடைந்துவிட்டதாக கூறியதால் விழா ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இதனால் சிலர் அனுமதியில்லாமலேயே சிலைகளை நிறுவிடுவோம் எனவும் மேலும் பலர் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் செய்யமுடியாமல் போய்விட்டதே எனும் கவலையுடன் திரும்பினர்.
தங்களது வீதிகளிலுள்ள மக்களிடம் வசூல் செய்து விழா நடத்தியாக வேண்டும் எனும் கட்டாயத்தில் உள்ளவர்கள் சிலர் எப்படியாவது அனுமதி பெற்றாக வேண்டும் என பலமணிநேரம் காந்திருந்தும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக தரப்பில் எவ்வித பதிலும் இல்லாததால் வருவாய் கோட்டாட்டசியர் ரம்யா அலுவலகத்திலிருந்து காரில் ஏறி புறப்பட முயன்றபோது அங்கிருந்த விழா ஏற்பாட்டாளர்கள் அவரது காரை நிறுத்தி அனுமதி வழங்க கோரிய நிலையில், காலக்கெடு முடிவடைந்து விட்டதாக அவர் கூற, விதிமுறைகள் குறித்து விழா ஏற்பாட்டாளர்களுக்கு தகவல் தெரிவிக்காதது ஏன் என கேள்விகளை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையெடுத்து தனித்தனியே சம்பந்தப்பட்ட துறைகளை நாடி தாங்களாகவே அனுமதி பெற்று வாருங்கள் என கூறி புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.