தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மையத்தின் அருகில் உலக அளவிலான அருங்காட்சியகம் அமைய இருக்கிறது.
ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி செய்து எடுக்கப்படும் பழமையான பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட இருக்கிறது.
வருகிற ஐந்தாம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா சீதாராமன் கலந்துகொண்டு அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் கலந்து கொள்ளும் விழா மேடை அருகில் அடிக்கடி தீ பற்றி எரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் இருக்கும் வாலைகள் பிடித்து இருந்தது.
நேற்று இரவு இந்த பகுதியில் திடீரென்று தெரிந்த காட்டுத்தீ பனை மரங்களையும் விட்டு வைக்கவில்லை. 30 பனை மரங்கள் தீப்பிடித்து எரிந்து நாசம் ஆகின.
தீயணைப்புத் துறையினர் கடுமையாக போராடியும் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் மூன்று மோட்டார் சைக்கிள், ஒரு பொக்லைன் எந்திரம் ஆகியவை எரிந்து நாசமானது.
இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற 5-ம் தேதி ஆதிச்சநல்லூரில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் அடிக்கடி தீப்பற்றி எரிந்தது. இது இயற்கையாக நடந்ததா அல்லது சரியா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- அண்ணாதுரை