மதுரை ரயிலில் தீ விபத்து; சட்டத்திற்கு புறம்பாக சிலிண்டர், அடுப்பு; 5 பேர் அதிரடியாக கைது

மதுரை ரயிலில் சட்டத்திற்கு புறம்பாக சிலிண்டர், அடுப்பு, விறகு எடுத்து சென்று தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அது தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை ரயில் விபத்து: 5 பேர் கைது
மதுரை ரயில் விபத்து: 5 பேர் கைது

லக்னோ-ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் சுற்றுலா ரயில் ஆகஸ்ட் 26ம் தேதி அதிகாலை மதுரை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீரென்று தீ பற்றி எரிந்தது. ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்படவே அடுத்தடுத்த பெட்டிகளில் தீ மளமளவென பரவியது.

இதற்கிடையில் கொள்ளையர்கள் யாரும் ஏறிவிடுவார்களோ என்ற அச்சத்தில் ரயில் பெட்டிகளை பயணிகள் பூட்டி வைத்துள்ளனர். இதனால் ரயிலில் தீ பற்றி எரிந்த போது உடனடியாக வெளியேற முடியாமல் பயணிகள் சிக்கி தவித்துள்ளனர்.

மதுரை ரயிலில் தீ விபத்து
மதுரை ரயிலில் தீ விபத்து

இந்நிலையில் இந்த விபத்தில் 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தது தெற்கு ரயில்வே.

ரயிலில் எடுத்து சென்ற சிலிண்டர், சமையல் பொருட்கள்
ரயிலில் எடுத்து சென்ற சிலிண்டர், சமையல் பொருட்கள்

அதையடுத்து ரயிலில் தீ பிடிக்கும் பொருட்களை எதுவும் எடுத்த செல்லக்கூடாது என்று தடையுள்ள நிலையில், பயணிகள் தடையை மீறி சிலிண்டர் எடுத்து சென்றது மட்டுமல்லாமல் சமையல் செய்ய முயற்சித்துள்ளனர். அதிகாலை வேலையில் டீ போடுவதற்காக சிலிண்டர் ஆன் செய்துள்ள நிலையில், அது வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை ரயில் தீ விபத்திற்கு காரணமான 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மருத்துவப் பரிசோதனை முடித்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 5 பேர்
கைது செய்யப்பட்ட 5 பேர்

மேலும் தடை செய்யப்பட்ட சிலிண்டர், அடுப்பு, விறகு போன்ற பொருட்களையும் சட்டத்திற்குப் புறம்பாக தங்களுடன் ரயிலில் எடுத்து வந்தக் குற்றச்சாட்டின் பேரில், ஐ.பி.சி. 304 (II), 285 மற்றும் 164 IRACT பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை ராசாசி மருத்துவனையில் மருத்துவப் பரிசோதனைக்குப் பின், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

கைதான் ஐவர்
கைதான் ஐவர்

கைதான தீபக், சத்பிரகாஷ் ரஸ்தோகி(சமையல்காரர்கள்), சுபம் கஸ்யம் (உதவியாளர்), நரேந்தர் குமார் (சுற்றுலா வழிகாட்டி), ஹார்திக் சஹானி ஆகிய 5 பேரும் உத்தரபிரதேச மாநிலம், சீட்டாபூரைச் சேர்ந்தவர்கள்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com