"பயம் என்பது என் சரித்திரத்திலேயே கிடையாது" - வீரலட்சுமி

நாம் தமிழர் கட்சியில் மீசை வைத்த ஒரு ஆம்பளை இருந்தால் வாங்க, ஒத்தைக்கு ஒத்தை நிற்கலாம் என்று வீரலட்சுமி சீமானுக்கு சவால் விடுத்துள்ளார்.
வீரலட்சுமி
வீரலட்சுமி

தமிழர் முன்னேற்ற படை தலைவர் கி. வீரலட்சுமியை, சீமான் ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டு தாக்க முயற்சித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் வீரலட்சுமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, "சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே செட்டில்மெண்ட் ஆனதால் என் மீது விஜயலட்சுமியும், சீமானும் எந்த குற்றச்சாட்டு வைத்தாலும் அதை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் சீமான் முற்றிலுமாக தோற்று போய்விட்டார். புகாரின் அடிப்படையில் செட்டில்மெண்ட் அளித்ததால் வழக்கை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார்.

சீமானை சிறையில் அடைக்க வேண்டிய ஆசை என்னிடம் இல்லை, பண்ண தவறுக்கு வருந்தி இருவரும் சமாதானம் ஆகியுள்ளனர். சீமான் விஜயலட்சுமியை தான் பலாத்காரம் செய்தார், என்னை ஏன் அவர் விசாரணைக்கு அழைக்க வேண்டும். விஜயலட்சுமி உன்னுடைய மனைவி விசாரணைக்கு அழைக்கலாம் என்னை விசாரணைக்கு அழைப்பதற்கு என்ன காரணம். விஜயலட்சுமி என்னிடம் பாதுகாப்பு கேட்டு வந்ததால் உண்மையாக நேர்மையாக உதவி செய்தேன்.

வீரலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர்
வீரலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர்

பயம் என்பது இந்த வீரலட்சுமியின் சரித்திரத்திலே இல்லை. சீமானுக்கு 56 வயது என்னுடைய அப்பா ஸ்தானத்தில் இருப்பதால் அவர் என்னை அவதூறாக பேசினாலும் அதை நான் பொருட்டாக கருதவில்லை.

என்னிடம் பல மடங்கு கூட்டம் உள்ளது வன்முறையில் ஈடுபடக்கூடாது என நான் தான் ஒதுங்கி உள்ளேன். கட்சியைக் கலைத்து என்னை வெட்டி போடுவதாக சொன்ன சீமான் அதுவரை என் கை பூப்பறித்துக் கொண்டிருக்குமா? என்னை வெட்டி போடுவதாக பூச்சாண்டி காட்டுகிறார் சீமான்.

நாம் தமிழர் கட்சியில் ஒரு ஆம்பளை இருந்தால் நான் சௌகார்பேட்டையில் வந்து நிற்கிறேன், நாம் தமிழர் கட்சியில் சேர்ந்த மீசை வைத்த ஆம்பளை யாராவது இருந்தால், நான் ஒண்டியாக நிற்கிறேன் எந்த வித ஆயுதமும் இன்றி நான் நிற்கிறேன். என்னை வெட்டி போடட்டும் பார்க்கலாம், சீமானா நானா பார்க்கலாம். என்னுடைய படையை திரட்டி கொண்டு வந்தால் வட மாவட்டங்களில் சீமான் ஒரு ஓட்டு கூட பெற முடியாது. வட மாவட்ட எல்லையில் சீமான் கால் வைக்க முடியாது" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com