தமிழக மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மஹா விஷ்ணு அவதாரம் எடுத்துள்ளதாக கூறி வந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி சாமியார்கள் உருவாகுவதற்கும், அவர்களை உயர்த்த நிலைக்கு கொண்டு செல்வதும் ஏமாறும் மக்களாகியே நாம் தான் காரணம். அதனால் தான் தினம் தினம் புது புது கெட்டப்பில் சாமியார்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். மக்கள் திருந்தாதாது வரை போலி சாமியர்களை ஒளிப்பது அரிது. 'கடவுள் இல்லை அப்படின்னு சொல்றவங்கள நம்பலாம்' 'கடவுள் இல்லைன்னு சொல்றாங்கல்ல அவங்களையும் நம்பலாம்' ஆனால் நான் தான் கடவுள் அப்படின்னு சொல்றவங்கள நம்ப கூடாதுன்னு கமலஹாசன் சொல்லும் வசனம் ரொம்பவே பிரபலம்.
அப்படி நான் கடவுள் எனக் கூறி ஏமாற்றி வந்த செஞ்சி சந்தோஷ்குமார், அவரது இரு மனைவிகளை கைது செய்துள்ளனர் போலீஸார். மக்களை காக்க மனித உருவில் வந்த கடவுள் என தன்னைத்தானே கூறிக்கொண்டு பேச முடியாதவர்களை பேச வைப்பதாகவும், நடக்க முடியாதவர்களை நடக்க வைப்பதாகவும் நாடகமாடிய செஞ்சி சந்தோஷ் குமார் என்ற போலி சாமியாரை போலீஸார் கைது செய்தனர். தன்னை மஹா விஷ்ணு எனவும், தனது மனைவிகளை ஸ்ரீதேவி, பூமாதேவி எனவும் கூறி வாழ்ந்து வந்துள்ளார்.