போலி அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர்- அரசு வேலை எனக்கூறி ரூ.54 லட்சம் மோசடி

கலெக்டர் ஆபீஸ்ல வேலை பார்க்கல. வேலை பர்க்கிறேன்னு சொல்லியே பல பேர ஏமாத்தி இருக்காங்க.
கைது செய்யப்பட்டுள்ள முகமது யாசில்
கைது செய்யப்பட்டுள்ள முகமது யாசில்

அரசு வேலை வாங்கி தருவதாக போலி அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்து ரூ.54 லட்சம் மோடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கமுள்ள தெற்கு உடையார்பாளையத்தை சேர்ந்தவர் விஜி. அரசு வேலை தேடி வருகிறார். இவர் சேலம் மாவட்ட குற்றபிரிவில் புகார் கொடுத்தார். அதில், மேட்டூரை சேர்ந்த மகேஷ்குமாருக்கும், எனக்கும் சில வருட பழக்கம்.

மகேஷ் என்னிடம் சேலம் கலெக்டர் ஆபிஸில் முகமது யாசில்ன்னு ஒருத்தர் இருக்காரு.அவர்கிட்ட காசு கொடுத்தா அரசு வேலை ரெடி செஞ்சி கொடுத்திடுவாருன்னு சொன்னாரு.அதை நம்பி 4 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்தேன்.மகேஷயும், யாசிலும் பணத்தை வாங்கிட்டு கிராம அலுவலர் அலுவலகத்தில் உதவியாளர் பணி என்று நியமன ஆணை கொடுத்தாங்க.அதை எடுத்துகிட்டு நானும் சேலம் கலெக்டர் ஆபிஸ்க்கு போனோன்.

அங்கபோய் பார்த்தபோதுதான் அவர்கள் கொடுத்தது டூபாக்குர் ஆணைனு தெரிஞ்சது.திட்டம் போட்டு ஏமாத்திட்டாஙகன்னு தெரிஞ்சது. அவங்கள பிடிங்க என்று சொல்லி இருந்தார். இதை வைத்து மாவட்ட குற்றபிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

போலீஸாரிடம் பேசினோம். ' முகமது யாசில் கலெக்டர் ஆபீஸ்ல வேலை பார்க்கல. வேலை பர்க்கிறேன்னு சொல்லியே பல பேர ஏமாத்தி இருக்காங்க. வேலை வாங்கி தர்றேன்னு சொல்லி 54 லட்சம் வரை வசூல் செஞ்சி இருக்காஙக.இதுல வேற யாரும் புகார் கொடுக்கல.' என்றார்கள்.

குற்றபிரிவு சப் இன்ஸ்பெக்டர் செந்திலிடம் பேசினோம். ' விசாரிச்சப்பவே மகேஷ்யும், யாசிலும் தலைமறைவாயிட்டாஙக. யாசில் சென்னை வடபழனியில இருப்பத கேள்விப்பட்டு போய் கைது செஞ்சோம்.மகேஷ் தேடி வர்றோம். பெண்களிடமும் பணம் வாங்கி ஏமாத்தி இருக்காஙக. விசாரிச்ச பல தகவல்கள் வரலாம். ' என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com