கொலை செய்து புதைக்கப்பட்ட துப்புரவு தொழிலாளியின் உடல் தோண்டி எடுப்பு- அதிர்ச்சி பின்னணி?

பாலகண்ணன் கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்தை சுடலைமணி அடையாளம் காட்டினார்.
கொலை செய்யப்பட்ட கண்ணன்
கொலை செய்யப்பட்ட கண்ணன்

திருச்செந்தூர் அருகே கொலை செய்து புதைக்கப்பட்ட துப்புரவு தொழிலாளி உடல் தோண்டி எடுக்கப்பட்டது சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பிரசாத் நகரை சேர்ந்த பால கண்ணன்(40). இவர் உடன்குடி அனல் மின் நிலையத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.

கடந்த 7-ம் தேதி வழக்கம்போல் அனல் மின் நிலையத்துக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பேச்சியம்மாள், கணவர் செல்லும் இடங்களில் எல்லாம் சென்று தேடி பார்த்தார். எங்கேயும் அவர் இல்லை. அதைத்தொடர்ந்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் வேலைக்கு சென்ற கணவரை காணவில்லை என்று புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பால கண்ணனை தேடி வந்தனர். இந்த நிலையில் திருச்செந்தூர் திருநெல்வேலி சாலையில் இருக்கும் அரசு மதுபான கடை அருகே பாலகண்ணன் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டு பாலக்கண்ணன் லேசாக காயம் அடைந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் திருச்செந்தூர் ஜே.ஜே.நகர் காட்டுப்பகுதியில் அவரது உடல் புதைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கண்ட போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. சம்பவத்தன்று பால கண்ணன் மீது மோட்டார் சைக்கிளில் கொண்டு மோதிய திருச்செந்தூரை சேர்ந்த பாலமுருகன்(19), சுடலைமணி(19) ஆகியோர் பால கண்ணனை கொலை செய்து முடித்த தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். பாலக்கண்ணன் மீது மோதிய மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்துள்ளது. அதற்கு அவர்கள் பால கண்ணனிடம் பணம் கேட்டுள்ளனர். பால கண்ணன் என்னிடம் பணம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். அதைத் தொடர்ந்து அவரை மிரட்டி தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள் ஏற்றி காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.

அங்கே வைத்து தனது நண்பருடன் சேர்ந்து பாலகண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்தனர். பிறகு அங்கேயே குழி தோண்டி பால கண்ணனை வைத்து விட்டனர். பாலகண்ணன் கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்தை சுடலைமணி அடையாளம் காட்டினார்.

இதனையடுத்து தாசில்தார் வாமனன், டிஎஸ்பி வசந்தராஜ் முன்னிலையில் இன்று பாலகண்ணனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திலேயே மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்து உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com