மதுரை கட்டட பொறியாளர்கள் சங்கம் சார்பில் தமுக்கத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு "இன்ஜினியர்ஸ் பில்ட் எக்ஸ்போ 2023" கட்டட கண்காட்சி நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மேயர் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர். கண்காட்சியை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் திறந்துவைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்:
மதுரையில் எந்த சாலையில் சென்றாலும் அங்குள்ள கட்டட வளர்ச்சி எந்த ஆண்டில் அந்த கட்டடம் கட்டப்பட்டது என்பது கண்ணுக்கே வித்தியாசம் தெரியும் அளவிற்கு தான் கட்டுமானம் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது.
சென்ற ஆண்டு என் விருப்பத்திற்கு ஏற்ப ஒன்றிய நிதியமைச்சர் ஜிஎஸ்டி கவுன்சிலை மதுரைக்கு கொண்டு வருவேன் என உறுதி அளித்து இருந்தேன். அந்த நிகழ்ச்சியை இந்த அரங்கில் நடத்த நினைத்திருந்தேன், ஆனால் அவர்கள் கொடுத்த தேதி பிப்ரவரியில் என்னால் நடத்த முடியவில்லை.
ஏனென்றால் துறை மாறியதால் ஜிஎஸ்டி கவுன்சிலிங் உறுப்பினராக இல்லை. அதனால் ஜிஎஸ்டி கவுன்சிலிங் நிகழ்ச்சி இங்கு நடத்த முடியவில்லை என்றாலும், கட்டட தொழில்நுட்ப கண்காட்சி நடத்துவது எனக்கு ஒரு ஆறுதலாக இருக்கிறது.