தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், உதவியாளர், இளநிலை உதவியாளர்களின் பணி நேரத்தை மாற்றம் செய்து, பள்ளிக் கல்வித்துறை திடீர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களான உதவியாளர், இளநிலை உதவியாளர்களின் வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரையில் மாற்றி அமைக்கப்படுகிறது.
பள்ளி வருகைப் பதிவேட்டை முடித்தல், ஆசிரியர்களின் விடுப்புகளை குறித்தல், பிற அலுவல் பணியை கையாளுவதில் ஏற்பாடும் நிர்வாக குறைபாடுகளை சரி செய்யும் வகையில் ஊழியர்களின் பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளின் நிர்வாக மேம்பாட்டிற்காக ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது என்பதால் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது’ என பள்ளிக் கல்வித்துறை ஆணையரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.