தமிழ்நாடு
செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் மீண்டும் ரெய்டு!
செந்தில் பாவாஜி தொடர்புடைய இடங்களில் இன்று மீண்டும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் பண மோடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அமலாக்கத்துறையால் கைதாகி புழல் சிறையில் உள்ளார் செந்தில் பாலாஜி. இதற்கிடையில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக அமலாக்கத்துறை வருகின்ற 15ம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று செந்தில் பாலாஜி குடும்பத்தினருடன் தொழில்முறையில் தொடர்புடையவர்கள் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை, திருச்சி, உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்து வருகின்றனர். மேலும் சென்னை அண்ணா நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் காலையில் இருந்தே அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.