இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை என்பதில் திமுக தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். குறிப்பாக தீபாவளி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு அவர்கள் வாழ்த்து சொல்வதில்லை. இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் அதை பற்றி அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. ஆனால், தூத்துக்குடி திமுக மேயர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயிலில் மக்களுக்கு அன்னதானம் வழங்கி அசத்தியிருக்கிறார்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருக்கிறது போத்தி விநாயகர் கோயில். இந்த கோயிலை உருவாக்கி, பரம்பரை தர்மகர்த்தாவாக இருந்தவர் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் என். பெரியசாமி. அவர் மறைந்த பிறகும் அவரது பணியை அவரது வாரிசுகளான அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் இன்று நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு போத்தி விநாயகர் கோயிலில் அன்னதானம் சிறப்பாக நடந்தது. அன்னதான நிகழ்ச்சியை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி முன் நின்று நடத்தினார்.