தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சு உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வதில் அதிக கவனம் செலுத்துபவர். நம் உடலை நாம் சீராக பார்த்து கொண்டால் நம் உடல் நம்மை பார்த்து கொள்ளும் என்ற சொல்லுக்கு ஏற்ப உடற்பயிற்சி அன்றாட நாளுக்கு எவ்வளவு முக்கியமானது என்று பிறருக்கும் எடுத்துரைப்பவர் அமைச்சர் மா.சு
இதையடுத்து எப்போதும் போல அமைச்சர் மா.சு தனது நடைபயிற்சியை முடித்து விட்டு இன்று காலை பார்வையாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவருக்கு லேசாக தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து அவருக்கு அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதையடுத்து அவரை தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு ஆஞ்சியோ சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். பின்னர் ஆஞ்சியோ செய்ததில் அமைச்சர் மா.சு- விற்கு எந்த வித அடைப்பும் இல்லை என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் மா.சு-வுக்கு மருத்துவ சிகிச்சை போதுமானது என்று முடிவு எடுக்கப்பட்டு மதியம் போல் நலமுடன் வீடு திரும்பினார் என்று மருத்துவர்களால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.