மேயர் தம்பி எரித்த ஆவணங்கள் யாருடையது? - அண்டர்கிரவுண்ட் விசாரணையில் அமலாக்கதுறை

கைப்பற்றப்பட்ட எரியாத ஆவணங்களைக் கொண்டு அண்டர்கிரவுண்ட் விசாரணை தற்போது ண்டந்து கொண்டுள்ளது
மேயர் கல்பனாவின் தம்பி குமார்
மேயர் கல்பனாவின் தம்பி குமார்

கோவை மேயர் கல்பனாவின் தம்பி குமார், கட்சி அடையாளத்தை வெச்சுக்கிட்டு ஆடுற ஆட்டம் அந்த மாநகராட்சியின் நூறு வார்டுகள்ள கட்சியின் பெயரை சிதைச்சுடும் போல’ என்று பொங்குகிறார்கள் திமுகவினர்.

பிரச்னை என்னவென்று திமுகவினர் தரப்பில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்….

”கோவை மாநகராட்சியின் மேயராக இருப்பவர் திமுகவை சேர்ந்த கல்பனா. மேயரின் தம்பி குமார் வரிசையாக பல்வேறு வில்லங்க விவகாரங்களில் சிக்கி வருகிறார்.

மேயரின் தம்பி குமார் தற்போது ஒரு புது சர்ச்சையில சிக்கியுள்ளார். கோவையின் பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. கடந்த ஜூன் மாசம் அமலாக்கத்துறை ரெய்டின் மூலம் கைது செய்யப்பட்டார். சிறையிலிருக்கும் அவரது சொத்துக்கள், நண்பர்கள், அரசியல் தொடர்புகள் மீது இப்பவும் அடிக்கடி ரெய்டுகள் நடந்த வண்ணமுள்ளன.

இந்த நிலையில, செந்தில்பாலாஜி கைதானதுக்கு மறுநாள் கோவை மேயர் கல்பனாவின் அம்மா வீடு இருக்கும் பகுதிக்கு கார்களில் சில பெட்டிகள் வந்து இறங்கியதாகவும், அந்த பெட்டிகளில் இருந்த காகிதங்களை மேயரின் தம்பி குமார் அங்குள்ள கிரவுண்டில் கொட்டி எரித்ததாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும், குமார் வைத்த தீயில் எரியாத சில ஆவணங்களும் சிலரால் கைப்பற்றப்பட்டு அமலாக்கத்துறைவரை போயுள்ளதாகவும் சொல்லப்படுகிறது

எரியாத காகிதங்களில் பணப்பரிவர்த்தனை பற்றிய விபரங்கள், கையெழுத்துகள் இருக்குது. அறுபத்தாறு லட்சத்து அம்பதாயிரம் அது இது என தொகைகள் எழுதப்பட்ட, எரியாத ஆவணங்கள் கிடைத்துள்ளன. இதை வெச்சுதான் இப்போதைக்கு அண்டர்கிரவுண்ட் விசாரணை போயிட்டிருக்கிறது. குமார் எரித்த ஆவணங்கள் என்ன? அவை வெறும் வேண்டாத பேப்பர்களா அல்லது செந்தில்பாலாஜியோ அல்லது எங்கள் கட்சியின் வேறு யாருடைய பணம் பற்றிய ஆவணங்களான்னு ஆய்வு நடக்கிறது. இதுல ஏதாவது சிக்கல் இருந்தால் குமார் விசாரணைக்கு அழைக்கப்படலாம்.

இந்த நிலையில, இந்த விவகாரம் பேப்பர்ல வந்து பொதுமக்களோட கவனத்துக்கு போயிடுச்சு. கோவை மேயர் டீம் தொடர்ந்து ஏதோ ஒரு சர்ச்சையில் சிக்கிறதால தலைமை அவங்க மேலே அப்செட் மற்றும் கோபத்தில் இருக்கிறதாக தகவல்” என்று இதுகுறித்த தகவல்களையறிந்த திமுகவினர் நம்மிடம் தெரிவித்தனர்.

இதற்கு விளக்கம் கேட்க குமாரை சில முறை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.

அடுத்த எபிஸொட் என்னாண்ணு கவனிப்போம்!

-ஷக்தி

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com