மதுரையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "டாஸ்மாக் கடைகளால் தமிழகத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்து உள்ளன. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடும் வரையில் புதிய தமிழகம் போராட்டத்தை நடத்தும், புதிய தமிழகம் கட்சியின் 26வது ஆண்டை முன்னிட்டு டிசம்பர் 15ம் தேதி மது ஒழிப்பு சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது.
சனாதனத்தை ஏன் ஒழிக்க வேண்டும்? என உதயநிதி ஸ்டாலின் தெளிவாக கூறவில்லை. சனாதனத்தில் உள்ள குறைபாடுகளை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக் காட்டவில்லை. நீதிமன்றமே உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர வேண்டும், கருத்துகளால் மக்களை பிளவுப்படுத்த திமுக நினைக்கிறது. சனாதனம் சொல் அளவிலும், எழுத்து அளவிலும் எந்தவொரு தவறுமில்லை. உதயநிதி ஸ்டாலின் சனாதன சர்ச்சை பேச்சுக்கு தமிழகத்தில் உள்ள 18 மடாதிபதிகளில் ஒருவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.
கண்ணியம், கட்டுப்பாடு, அன்பை உள்ளடக்கியதே சனாதனம், சனாதனம் குறித்த பேச்சுக்கு திமுக பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு இனிமேல் சனாதனம் குறித்து பேசக்கூடாது. இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் அம்மக்களின் கோரிக்கை. ஆனால் திமுக தேவேந்திர குல வேளாளர் மக்களிடம் ஒளிந்து கொள்வதற்காக மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்துள்ளது" என கூறினார்.