நில அளவையர்களிடம் மாவட்ட ஆட்சியர் கேள்வி கேட்ட போது அதிகாரிகள் திணறிய சம்பவம் வைரலாகி வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் 16 வருவாய் கிராமங்களில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்ச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது . மாவட்ட ஆட்சியர் சாந்தி இந்நிகழ்ச்சியைக் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வெளியே நிலம் அளக்கப் பயன்படும் சங்கிலி அலுவலகத்தில் முன்பு ஒவ்வொரு வருவாய் கிராமத்தின் சார்பிலும் வைக்கப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் சாந்தி நில அளவையர்களை அழைத்து எவ்வாறு நிலங்களை அளப்பீர்கள் எனக் கேட்டார். அதற்கு இரண்டு நில அளவையர்கள் பதில் சொல்ல முடியாமல் மௌனமாக இருந்தனர்.
இதனையடுத்து மற்றொரு நில அளவையர் ஒருவரை அழைத்து கேள்வி கேட்டுள்ளார். அந்த நில அளவையர் அவருக்குத் தெரிந்ததை மட்டும் சொல்லிவிட்டு திருதிருவென முழித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சாந்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், நில அளவை தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.