மெட்ரோ ரயில் திட்டத்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஆபத்து! - எச்சரிக்கும் இந்து முன்னணி

மீனாட்சி அம்மன் திருக்கோவில் சுற்று சுவரில் இருந்து 500 மீட்டருக்கு அப்பாற்பட்டு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர வேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் பேசியதாவது,

"மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. ஆனால் மீனாட்சி அம்மன் கோயில் சுற்று சுவரில் இருந்து 110 மீட்டர் தொலைவில் மெட்ரோ சுரங்கப்பாதை மற்றும் மெட்ரோ ரயில்வே ஸ்டேசன் அமைக்க திட்டமிடுவதை இந்து மக்கள் கட்சி எதிர்க்கிறது.

ஏனென்றால் கோயில் மாநகரமாக அழைக்கப்படும் உலகப்புகழ் பெற்ற புண்ணியதலமான மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மிகவும் பழமையான பண்பாட்டுச் சின்னமாக இருக்கிறது. கடம்பவன காட்டை திருத்தி நகரமாக இறைவனால் அமைக்கப்பட்டது.

மீனாட்சி அம்மன் கோபுரங்களின் அடித்தளம் ஏறத்தாழ சுமார் 160 அடியாக உள்ளது. வடக்கு ஆவணி மூலவீதி வரை வருகிறது. கோயிலை சுற்றி ஏராளமான சுரங்கங்கள் உள்ளன என்று வரலாறு கூறுகிறது. நவீன இயந்திரங்களால் அதிக சத்தத்துடன் சுரங்கப்பாதை தோண்டும் போது கோபுரங்களின் அஸ்திவாரத்திற்க்கு ஆபத்து ஏற்பட்டு கோபுரங்கள் இடியும் சூழ்நிலை உருவாகி விடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிழவுகிறது.

மேலும் மீனாட்சி அம்மன் கோயில் ஆடி வீதியிலிருந்து வெளி வீதி வரைக்கும் நடைபெறும் திருவிழாக்கள் 12 மாதமும் நடைபெறுகிறது. இந்த மெட்ரோ திட்டம் வந்தால் சுவாமி புறப்பாடு தேரோட்டம் போன்ற திருவிழாக்கள் தடைபடும்.

சோலைக்கண்ணன்
சோலைக்கண்ணன்

அதே போல் பலதரப்பட்ட லட்சகணக்காண மக்கள் தினந்தோறும் திருக்கோவிலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு இந்த மெட்ரோ ரயில் பயன்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.

500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தாஜ்மஹால் அருகில் இந்த மெட்ரோ ரயில் திட்டம் இல்லாமல் 500 மீட்டர் தொலைவில் அமைத்து இருக்கிறார்கள். ஆனால் 3000 ஆண்டு பழமையான பண்பாட்டுச் சின்னமாக நமது மீனாட்சி அம்மன் கோயில் அருகில் 110 மீட்டர் தூரத்தில் அமைத்தால் கண்டிப்பாக கோபுரத்திற்கு பாதிப்பு உண்டாகும்.

ஆகவே மீனாட்சி அம்மன் கோயில் சுற்று சுவரில் இருந்து 110 மீட்டர் தொலைவில் கொண்டு வரும் மெட்ரோ திட்டத்தை மாற்று வழியில் அமைத்து அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எந்த ஒரு ஆபத்தும் பாதிப்பும் ஏற்படாத வகையில் மீனாட்சி அம்மன் திருக்கோவில் சுற்று சுவரில் இருந்து 500 மீட்டருக்கு அப்பாற்பட்டு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மாநில அரசுக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை வைக்கிறது" என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com