கொள்ளிடம் ஆற்றங்கரை சேதம் - வெள்ள அபாயம்!

கொள்ளிடம் ஆற்றில் பல மாதங்களாக சேதம் அடைந்துள்ள கரை பகுதிகளையும், கான்கிரீட் தடுப்புகளையும் சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை.
சேதம் அடைந்துள்ள கரை பகுதி
சேதம் அடைந்துள்ள கரை பகுதி

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே சுக்காம்பார் கிராமம் உள்ளது. இந்த கிராமம் கல்லணையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. கல்லணை காவிரி ஆற்றில் இருந்து திறந்து விடும் தண்ணீர் மற்றும் முக்கொம்பிலிருந்து நேரடியாக கொள்ளிடத்திலிருந்து வரும் தண்ணீர் அனைத்தும் சுக்காம்பார் வழியாக கொள்ளிடம் ஆற்றில் செல்கிறது.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் கொள்ளிடம் கரையில் அரிப்பு ஏற்படாமல் தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தவும், கொள்ளிடம் ஆற்றில் 100 மீட்டர் இடைவெளியில் கரைகளில் கான்கிரீட் தடுப்புகளும் கட்டப்பட்டன.

சேதம் அடைந்துள்ள கரை பகுதி
சேதம் அடைந்துள்ள கரை பகுதி

இந்த தடுப்புகள் கட்டப்பட்டு சுமார் 15 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு கொள்ளிடம் ஆற்றில் ஐந்து முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுக்காம்பார், கோவிலடி, மரூர், உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதியில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகள் 20 அடி ஆழத்துக்கு மேல் மணல் அள்ளி வருவதாலும், மணல் அரிப்பாலும் கொள்ளிடம் ஆற்றங்கரையில் கட்டப்பட்டுள்ள கான்கிரீட் தடுப்புகள் பல்வேறு இடங்களில் உடைந்து காணப்படுகின்றன.

சேதம் அடைந்துள்ள கரை பகுதி
சேதம் அடைந்துள்ள கரை பகுதி

குறிப்பாக சுக்காம்பார் பகுதியில் உள்ள கான்கிரீட் தடுப்புகள் முற்றிலும் இடிந்து ஆற்றில் விழுந்து விட்டது. மேலும் கரையில் உள்ள படிக்கட்டுகள் தனியாக உடைந்து காணப்படுகிறது. சுக்காம்பார் போன்ற பல்வேறு கிராமப் பகுதியில் ஆற்றின்

கரை தடுப்புகள் இடிந்துள்ளன. வரும் நாட்களில் மழை அதிகரித்துக் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கரைப்பகுதி முற்றிலும் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என சுக்காம்பார் பகுதி பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

சேதம் அடைந்துள்ள கரை பகுதி
சேதம் அடைந்துள்ள கரை பகுதி

உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களை கண்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் கோரிக்கையாக உள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com