வெளிநாட்டு சரக்கு காலாவதியாகுமா? -சரக்கு பெட்டிகளை கரூரில் அழித்த சுங்கத்துறை

சுங்க துறை அதிகாரிகள் இந்த சரக்கை பாதுகாக்க வழி இல்லாததால் அழித்துள்ளார்கள் என தகவல் கிடைத்துள்ளது.
குழித்தோண்டி அழிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள்
குழித்தோண்டி அழிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள்

திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டு மதுபானங்களை கரூரில் குழித்தோண்டி சுங்கத்துறை அதிகாரிகள் அழித்தனர்.

திருச்சி விமான நிலையம் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பலரிடமருந்து 2010 முதல் பிடிபட்டு வந்த 810 மதுபானங்கள் அடங்கிய பெட்டிகளை கரூரில் உள்ள கல்லுமடை பகுதியில் குழிபறித்து புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டன.

கரூர் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் மதுபாட்டில் பெட்டிகளை அழித்தனர்.

இதுபற்றி கரூர் மாநகராட்சி அதிகாரி ஒருவர் நம்மிடம்,”2010 ஆண்டு முதல் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது,இந்த மதுபாட்டில்கள் பிடிபட்டவை.இவைகளை திருச்சி பகுதியில் அழிக்க வசதி இல்லை. கரூர் அருகே கல்லுமடை பகுதியில் அதற்கான வசதிகள் இருப்பதால் மாநகராட்சியின் உதவி கேட்டனர். மாநகராட்சி நகர் நல அலுவலர்கள் முன்னிலையில் குழித்தோண்டி அழித்தோம். இதன் சந்தை மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும்” என்றார்.

சரக்கு காலாவதியாகுமா..? என்று கரூரில் உள்ள டாஸ்மாக் சூப்பர் வைசர் ஒருவரிடம் கேட்டபோது, ”சரக்கு நாளாக ஆக அதன் மதிப்பு கூடும். சரக்குக்கு எக்ஸ்பிரி டேட் கிடையாது. சுங்க துறை அதிகாரிகள் இந்த சரக்கை பாதுகாக்க வழி இல்லாததால் அழித்துள்ளார்கள்” என்றார்.

-அரவிந்த்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com