கடலூர் அருகே வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு கிலோ கஞ்சாவை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர். கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்தனர். தப்பியோடி நபரை தேடி வருகின்றனர்.
கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் காவல் உதவி ஆய்வாளர் தம்பிராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த சமயத்தில் ஹீரோ கம்பெனியின் ஃபேஷன் ப்ரோ இரண்டு சக்கர வாகனம் டி.என்.04 ஏ.ஹெச்.7934 என்ற பதிவு எண் கொண்ட வாகனத்தில் அதிபயங்கரமான வேகத்தில் வந்த இருவர், காவலர்கள் வாகனத்தை நிறுத்த கூறியும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றார்.
இதனால், கடலூர் புதுநகர் காவல் நிலைய காவலர் முதல் நிலைக்காவலர்.கணபதி,ஆயுதப்படை காவலர் மோகன்குமார் ஆகியோர் அந்த வாகனத்தை தொடர்ந்து பின் சென்றனர்.
மேலும், செல்லங்குப்பம் சி.கே. கல்லூரி அருகே வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓட மூயன்ற சிதம்பரம் கிழக்கு தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் அஜய் (20) என்பவரை மட்டும் பிடித்தனர்.
அவரிடம் சோதனை செய்து பார்த்ததில் கருப்புநிற பேக் வைத்திருந்தார். அதை பிரித்து பார்த்தபோது அதில் சுமார் ஒரு கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
-பி.கோவிந்தராஜு